குயின்ஸ்லாந்து,
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஊரபிண்டா பகுதியில், பைத்தான் வகை பாம்பு ஒன்றை பயன்படுத்தி சிறுவர்கள் சிலர் ஸ்கிப்பிங் விளையாடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஏறக்குறைய ஒரு மீட்டருக்கும் கூடுதலான நீளம் கொண்ட அந்த பாம்பை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்தி உள்ளனர். இருபுறமும் நின்று கொண்டு 2 சிறுவர்கள் கையால் பிடித்து கொள்ள, மற்றொரு சிறுவன் ஸ்கிப்பிங் ஆடுகிறான். அப்போது அந்த சிறுவர்களில் ஒருவன் இது கருப்பு தலையுடன் கூடிய பைத்தான் பாம்பு என கூறுகிறான்.
சிறுவர்கள் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இதுபற்றி சுற்றுச்சூழல், சுற்றுலா, அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான துறையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, இந்த முறையற்ற செயலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். விலங்குகளை மதிப்புடன் நடத்த வேண்டும் என அனைவரையும் அவர் கேட்டு கொண்டார்.
இந்த செய்தியையும் படிங்க: தூங்கி கொண்டிருந்த பெண்ணின் முதுகில் ஏறி படம் எடுத்து நின்ற பாம்பு… வைரலான வீடியோ