நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி பல வருடங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன், அவருக்கு அனுப்பிய கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். கமல்ஹாசன் எழுதி இருக்கும் அந்தக் கடிதத்தில், ” அன்புள்ள கொட்டாச்சி அவர்களுக்கு… அனைவரையும் பெயர் மற்றும் திறமைகளைச் சொல்லி தனித்தனியே அறிமுகப்படுத்தும் நேரமும் வாய்ப்பும் விழா மேடையில் அமையவில்லை.
அதைச் செய்யும் களமாக படப்பிடிப்பு களம் அமையும் என உறுதி கூறுகிறேன். விழாவிற்கும் வந்து மேடையை அழகுப்படுத்தியதற்கு நன்றி” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தக் கடிதத்தை தற்போது பகிர்ந்து கொட்டாச்சி வெளியிட்டிருக்கும் பதிவில், ” இந்த கடிதத்தை என் காலத்துக்கும் நான் மறக்க முடியாது. விருமாண்டி படத்தின் பங்க்ஷன் ஒரு மேடையில் நடந்தது அப்பொழுது கமல் சார் பேசிக்கொண்டு இருந்தார்.
ஆனால் நடிகர்களை தனித்தனியாக யாரையும் குறிப்பிட்டு அந்த மேடையில் அறிமுகம் செய்யவில்லை. ஆனால் நாங்கள் அனைவரும் மேடையில் அமர்ந்திருந்தோம் இரவு பங்க்ஷன் முடிந்தவுடன் மறுநாள் என் வீட்டுக்கு வந்த முதல் கடிதம் இது நான் நடிகன் ஆனவுடன் என் வீடு தேடி வந்த முதல் கடிதம். காலத்துக்கும் மறக்க முடியாது. இந்த நினைவுகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…