Samsung Galaxy F55: புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி F55 போனை வாங்கினால் பம்பர் தள்ளுபடி கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி F55 இ-காமர்ஸ் வலைத்தளமான Amazon தளத்தில் 41 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. அதிக அளவில் விற்பனை ஆகும் ஸ்மார்போன்களின் சாம்சங் போன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசானில் பம்பர் தள்ளுபடி
சாம்சங் கேலக்ஸி F55 அமேசானில் 28,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் 41 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு, அதன் விலை மேலும் வெகுவாகக் குறைந்துள்ளது. அமேசானில் இருந்து ரூ.17,096 என்ற விலையில் வாங்கலாம். இது மட்டுமின்றி, ரூ.829 முதல் EMI கடன் வசதிக்கான ஆப்ஷனையும் பெறுவீர்கள். இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் Snapdragon 7 Gen 1 செயலி உள்ளது. இது தவிர, நீண்ட நேரம் நீடித்திருக்கும் வகையிலான அதிக செயல் திறன் கொண்ட 5000mAh பேட்டரி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி F55 பல சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் 128 ஜிபி + 8 ஜிபி ரேம் சேமிப்பக விருப்பத்துடன் ரைசின் பிளாக் நிற மாடலுக்கு அசத்த ஆஃபர் வந்துள்ளது. இதன் கேமரா தரமும் அபாரமானது.
Samsung Galaxy F55 போனின் அம்சங்கள்
1. ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் முழு-எச்டி பிளஸ் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது.
2. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm’s Snapdragon 7 Gen 1 செயலி பொருத்தப்பட்டுள்ளது.
3. ஃபோனின் சேமிப்பகத்தை 1TB வரை அதிகரிக்கும் வசதி microSD கார்டு மூலம் கிடைக்கிறது.
4. 50 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா லென்ஸ் ஆகியவை ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ளன.
4. செல்ஃபி பிரியர்களுக்கான 50-மெகாபிக்சல் கேமரா தொலைபேசியில் உள்ளது.