சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவ கிளினிக் ஊழியரின் பிறப்புறுப்பை வெட்டிய கணவன்

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 45). இவரது மனைவிக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் நேற்று அப்பகுதியில் உள்ள மருத்துவ கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.

கிளினிக்கில் தர்மேந்திர மாவி (வயது 42) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது, சிகிச்சைக்கு வந்த சதீசின் மனைவியிடம் தர்மேந்திர மாவி பாலியல் ரீதியில் சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், வீட்டிற்கு வந்து கணவன் சதீசிடம் நடந்ததை கூறியுள்ளார். கிளினிக் ஊழியர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றாக கணவரிடம் அப்பெண் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியும், கோவமும் அடைந்த சதீஷ் தனது மைத்துனுர்களான விவேக், விக்ரம் ஆகியோரை அழைத்துக்கொண்டு கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.

கிளினிக்கில் இருந்த தர்மேந்திர மாவியை 3 பேரும் சேர்ந்து கடுமையாக தாக்கினர். அப்போது, சதீஷ் தான் மறைத்து கொண்டுவந்த கத்தியால் தர்மேந்திர மாவியிடன் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இதனால், அலறி துடித்த மாவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாவியின் உடல்நிலை மோசமான நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷ் மற்றும் அவரது மைத்துனர்கள் என 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.