ஹாரி ப்ரூக்கை விடுங்க… ஐபிஎல் வரலாற்றில் தடை செய்யப்பட்ட 7 வீரர்கள்!

IPL Ban: ஐபிஎல் 2025 தொடர் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தொடங்க இருக்கிறது. அனைத்து அணிகளும் அதன் பயிற்சி முகாம்களை மேற்கொண்டு வருவதால் வீரர்கள் பலரும் அவரவர் அணிகளில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து வீரர்கள் உள்ளிட்ட சிலர் இன்னும் அணிகளுடன் இணையாமல் இருக்கின்றனர்.

IPL Ban: ஹாரி ப்ரூக்கிற்கு 2 ஆண்டுகள் தடை

மேலும் பல வீரர்கள் காயத்தால் தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர். காயத்தில் சிக்கிய சிலர் இந்த தொடரில் பங்கேற்பார்களா இல்லையா என்பது இன்னும் உறுதியாகாமலும் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, டெல்லி அணியால் ரூ.6.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஹாரி ப்ரூக் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடப்போவதில்லை என அறிவித்தார். இதனால், புதிய விதிகளின்படி அவர் ஐபிஎல் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

IPL Ban: தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள்

இதனால் அவர் அடுத்த 2 சீசன்களில் விளையாட முடியாது. அடுத்த ஐபிஎல் மெகா ஏலத்திலேயே பங்கேற்க இயலும். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் இருந்து ஒரு வீரர் தடை செய்யப்படுவது முதல்முறையல்ல. 2008 தொடருக்கு பின்னர், மும்பை பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் தற்போது வரை ஐபிஎல் விளையாட தடை உள்ளது.

IPL Ban: தடைசெய்யப்பட்ட வீரர்களின் லிஸ்ட்

அந்த வகையில், ஹாரி ப்ரூக், பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.

1. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்

இவர்கள் இருவரும் 2018இல் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓராண்டு தடை செய்யப்பட்டனர். இவர்கள் இதனால் 2018 ஐபிஎல் சீசனிலும் தடை செய்யப்பட்டனர். அப்போது ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணியில் விளையாட இருந்தார். டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தார்.

2. ஹர்பஜன் சிங்

2008ஆம் ஆண்டு அதாவது முதல் ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் (அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப்) அணி வீரர் ஸ்ரீசாந்தை, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஹர்பஜன் சிங் அறைந்துவிட்டார். இதன் காரணமாக அந்த தொடரில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார், அந்த தொடர் முழுவதும் தடை செய்யப்பட்டார்.

3. முகமது ஆசிப்

பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் 2008 சீசனுக்கு பின்னர் விளையாடவில்லை என்றாலும் இவர் 2008 சீசனில் பாதியிலேயே தடைசெய்யப்பட்டார். காரணம், இவர் நான்ட்ரோலோன் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது நிரூபணமானது. இவர் அந்த சீசனில் 8 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

4. ரவீந்திர ஜடேஜா

இது பலருக்கும் ஷாக்காக இருக்கலாம்… ஆனால் உண்மைதான். இன்று சிஎஸ்கேவின் தளபதியாக திகழும் ஜடேஜா 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தடை செய்யப்பட்டார். அதாவது அவர் ராஜஸ்தான் அணியுடனும், மற்ற அணிகளுடனும் அவரது சம்பளம் குறித்து பேரம் பேசி வந்தது தெரியவந்தது. இதன் காரணமாக அவர் 2010 சீசனில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

5. லூக் போமர்ஸ்பாக்

ஆஸ்திரேலியா வீரரான லூக் போமர்ஸ்பாக் 2012இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்தார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட அமெரிக்க பெண்ணை தாக்கிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆர்சிபி அணி வீரர்கள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவதற்காக டெல்லியில் உள்ள ஹோட்டல் மௌரியாவில் தங்கியிருந்தனர். அப்போதுதான் லூக் போமர்ஸ்பாக் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை ஆர்சிபி இடைநீக்கம் செய்தது.

6. பிரவீன் தாம்பே

42 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர்தான் பிரவீன் தாம்பே. இவர் 2013இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். 2014 சீசனில் மட்டும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரை 2019 சீசனில் கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

ஆனால், இவர் 2018இல் T10 லீக்கில் விளையாடிய காரணத்தால் பிசிசிஐ இவர் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதித்தது. பிசிசிஐ விதியின்படி, ஓய்வு பெறாத கிரிக்கெட் வீரர்கள் பிசிசிஐ அனுமதி இன்றி வெளிநாட்டு லீக்கில் விளையாடக்கூடாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.