அக​விலைப்​படி​யுடன் கூடிய ஓய்​வூ​தி​யம் வழங்​க ​கோரி சத்துணவு ஊழியர்​கள் ஆர்ப்​பாட்​டம்

சென்னை: சத்​துணவு ஊழியர்​களாக பணி​யாற்றி ஓய்​வு​ பெற்​றவர்​களுக்கு அகவிலைப்​படி​யுடன் கூடிய ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும். அரசு ஊழியர்​களுக்கு வழங்​கு​வது​போல் மருத்​து​வக் காப்​பீடு வழங்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு சத்​துணவு மற்​றும் அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கத்​தின் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று நடை​பெற்​றது. இதில் 100-க்​கும் மேற்​பட்ட சத்​துணவு ஊழியர்​கள் பங்​கேற்​றனர்.

ஆர்ப்பாட்​டத்​துக்கு சங்​கத்​தின் மாவட்டத் தலை​வர் ஏ.முத்​துலிங்​கம் தலைமை தாங்​கி​னார். ஆர்ப்​பாட்டம் குறித்து சங்​கத்​தின்பொருளாளர் இந்​தி​ராணி கூறியதாவது: இன்​றைய கால​கட்​டத்​தில் ரூ.2 ஆயிரம் ஓய்வூதிய தொகையை வைத்து வாழ்க்​கையை நடத்த முடிய​வில்​லை. எனவே அகவிலைப்​படி​யுடன் கூடிய ஓய்​வூ​தி​ய​மாக ரூ.6,750 வழங்க வேண்​டும் என தொடர்ந்து 8 ஆண்​டு​களாக போராட்​டங்​களை நடத்தி வரு​கிறோம். இது​வரை எங்​களது கோரிக்​கைக்கு தீர்வு கிடைக்​க​வில்​லை என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.