கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் சாப்ரா பகுதி சாலையில் அதி வேகத்தில் வந்த கார் ஒன்று எதிரில் வந்த ஆட்டோக்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 3 பெண்கள் மற்றும் குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுதிய காரின் டிரைவர் காரை விட்டுவிட்டு தப்பி சென்றார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.