Virat Kohli: இந்திய கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று பார்மட்களிலும் தற்போது பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது எனலாம். ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, முகமது ஷமி உள்ளிட்டவர்கள் சர்வதேச கிரிக்கெட்டின் கடைசி கட்டத்தில் இருக்கிறார்கள் எனலாம்.
Virat Kohli: டி20ஐயில் ஓய்வு பெற்ற விராட் கோலி
டெஸ்டில் புஜாரா, ரஹானே ஆகியோர் தற்போது விளையாடுவதில்லை அவர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் தேவை. அஸ்வின் ஓய்வை அறிவித்துவிட்டார், ஜடேஜாவும் இன்னும் ஓரிரு ஆண்டுகள் விளையாடுவார். அதேபோல், டி20இல் ரோஹித், விராட், ஜடேஜா உள்ளிட்டோர் ஓய்வு பெற்றுவிட்டனர்.
ஆனால் இவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் தொடர் விளையாடிக்கொண்டே தான் இருப்பார்கள். குறிப்பாக, விராட் கோலி இன்னும் 5-6 சீசன்கள் ஆர்சிபி அணிக்கு விளையாடுவார் எனலாம். சிஎஸ்கேவுக்கு தோனி விளையாடியதை போல் நீண்ட ஆண்டுகள் விளையாட அவர் திறன் பெற்றுள்ளார்.
Virat Kohli: ஆர்சிபி உடன் இணைந்த விராட் கோலி
அந்த வகையில், அவர் 2025 சீசனை முன்னிட்டு ஆர்சிபி அணியுடன் இன்று இணைந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்ற உடன் ஜடேஜா அப்படியே சென்னைக்கு வந்து சிஎஸ்கே முகாமில் இணைந்துவிட்டார். ரோஹித் சர்மா குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். விராட் கோலி ரேடாரிலேயே வராமல் இருந்த நிலையில், இன்று ஆர்சிபி முகாமில் இணைந்துவிட்டார் எனலாம்.
Virat Kohli: ஓய்வுக்கு பின்னர் விராட் கோலி
அந்த வகையில், இன்று ஆர்சிபி அணியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விராட் கோலி, டி20ஐ பார்மட் அறிவித்த ஓய்வில் இருந்து யூ-டர்ன் அடிப்பாரா என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை தந்துள்ளார் எனலாம். இந்த நிகழ்ச்சியில் விராட் கோலியை முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை இஷா குஹா பேட்டியெடுத்தார்.
முதலில், ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு விராட் கோலி,”ஒருவேளை அதிகம் சுற்றுலா போகலாம், ஆனால் என்ன செய்யப்போகிறேன் என எனக்கே தெரியவில்லை. என் உடன் விளையாடிய மற்றொரு வீரரிடம் இது பற்றி கேட்டேன். ஆனால் , அவரும் இதையே தான் சொன்னார்” என பதில் அளித்தார்.
Virat Kohli: ஓய்வில் இருந்து திரும்பி வருவேனா…?
அதை தொடர்ந்து, 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விளையாடும் எண்ணம் இருக்கிறதா, அதற்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுவீர்களா என்ற கேள்விக்கு விராட் கோலி,”இல்லை. ஒலிம்பிக்கிற்காகவா கேட்கிறீர்கள்? இருக்கலாம்? தங்கப் பதக்கத்திற்காக விளையாடினால், நான் ஒரு ஆட்டத்திற்கு ஓய்வில் இருந்து திரும்பி வருவேன் (சிரித்தபடியே கூறினார்). ஒரு பதக்கம் பெற்றுவிட்டு மீண்டும் ஓய்வுக்கு திரும்பிவிடுவேன். அது ஒரு நல்ல விஷயம். ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருப்பது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கும், அது முதல் அனுபவம் ஆகும்” என்றார். இதன்மூலம் அவர் திரும்பி வருவதற்கான வாய்ப்பு குறைவு எனலாம்.
மேலும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு,”உலக முழுக்க பல்வேறு டி20 தொடர்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஐபிஎல் முக்கிய பங்கை செலுத்துகிறது என நினைக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் வரை ஐபிஎல் கொண்டு வந்துள்ளது. வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும்” என்றார்.
மேலும் படிக்க | IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் அதிரடி ஓப்பனர்கள் யார் யார்? பட்டையை கிளப்பும் லிஸ்ட்!