சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். இன்று வேளாண் பட்ஜெட்டை என்பதால், தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்தவாறு வேளாண் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய […]
