அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருக்கிறார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. தமிழில் அறிமுகமான தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கும் கயாடு லோஹர் ‘டிராகன்’ படத்திற்கு முன்பு நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2021ம் ஆண்டு வெளியான ‘முகில்பேட்டே’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். பிறகு ‘பதோன்பதம் நூட்டாண்டு’ என்ற மலையாள படத்திலும் நடித்திருக்கிறார்.
‘அல்லூரி’ என்ற தெலுங்கு படத்திலும், ‘ஐ பிரேம் யு’ என்ற மராத்தி படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது ‘டிராகன்’ படத்திலும் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். அஸ்ஸாமின் தேஜ்பூரில் பிறந்து வளந்த கயாடு லோஹர் தற்போது புனேவில் வசித்து வருகிறார். B.Com படித்துள்ள இவர் மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால் தற்போது கதாநாயகி ஆகியிருக்கிறார்.

அடுத்ததாக தமிழில் அதர்வா முரளி நடிக்கும் ‘இதயம் முரளி’படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
‘டிராகன்’ படத்திற்கு முன்பு கயாடு லோஹர் நடித்திருக்கும் படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…