உதவி லோகோ பைலட் பணிக்கான தேர்வு மைய சர்ச்சை: ரயில்வே தேர்வாணையம் விளக்கம்

ரயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு கணிப்பொறி சார்ந்த தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இது பற்றி ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது; ரயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு முடிந்த அளவிற்கு சொந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கான கணிப்பொறி சார்ந்த முதல் கட்ட தேர்வு பல கால முறைகளில் நடந்தது. ஒவ்வொரு கால முறைக்கும் வேறு, வேறு கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டன. தேர்வர்கள் வசதிக்கென இரண்டாம் கட்ட தேர்வு ஒரே கால முறையில் , ஒரே மாதிரியான பொதுவான கேள்வித்தாளுடன் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக தேர்வர்களுக்கு முடிந்த அளவிற்கு சொந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் மார்ச் 17 , 18 ஆகிய நாட்களில் ரயில்வே பாதுகாப்பு படை பணிகளுக்கான தேர்வுகள் முடிந்தவுடன் மார் 19 , 20 ஆகிய நாட்களில் உதவி லோகோ பைலட் பணிக்கு தேர்வுகள் நடக்கின்றன. இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு சொந்த மாநிலத்தில் குறிப்பிட்ட நகரத்திலுள்ள ஒரே தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை ரயில்வே தேர்வாணையத்தில் இரு பதிவிகளுக்கும் விண்ணப்பித்த 15,000 விண்ணப்பதாரர்களுக்கு இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான ஒதுக்கீடு இந்தியாவிலுள்ள 21 ரயில்வே தேர்வு ஆணையங்களிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த இரண்டாம் கட்ட கணிப்பொறி சார்ந்த தேர்வுகளுக்கும் இதே ஒதுக்கிடு முறை தான் கடைபிடிக்கப்பட்டது. இந்த தேர்வுகளில் பங்கேற்ற வழக்கத்திலுள்ளபடி பட்டியலின மாணவர்களுக்கு இலவச பயண பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.