ஐபிஎல் 2025: இந்த அணிதான் கோப்பையை வெல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!

ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்குகிறது. அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. அடுத்த நாளில் (மார்ச் 23) சென்னை – மும்பை அணி மோதுகின்றன. இந்த நிலையில், ஐபிஎல் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சிஎஸ்கே அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புகழ்ந்து பேசி இருக்கிறார். 

இது குறித்து பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்த ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்படும். அந்த அணியே சாம்பியன் ஆக வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான தொடக்க ஆட்டம் சூப்பராக இருக்கும். மேலும் இந்த சீசன் ரொம்பவே நல்ல இருக்கும் என தெரிவித்துள்ளார். 

பொதுவாக சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே, திருவிழாவாக இருக்கும். அந்த வகையில், இந்த சீசனில் வரும் மார்ச் 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கில் வைத்து நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கு ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

மேலும் படிங்க: IPL 2025: ஓய்வுபெறும் இந்த 5 வீரர்கள்… இதுதான் கடைசி ஐபிஎல் தொடர்!

சமபலம் கொண்ட அணிகள்

ஐபிஎல் தொடரில் பெரிய அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளித்தது கிடையாது. இந்த அணிகள் மோதும் போட்டி இறுதி வரை விறுவிறுப்பாகவே செல்லும். 

இந்த இரு அணிகளுமே தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணி கடந்த 2023ஆம் ஆண்டு கடைசியாக கோப்பையை கைப்பற்றியது. ஆனால் மும்பை அணி கோப்பையை வென்று 4 ஆண்டுகள் ஆன காரணத்தினால், இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என முனைப்புடன் களம் இறங்குகிறது. அதற்கு ஏற்றவாறு அணியும் நல்ல பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ரசிகர்களின் பாணியின் கூற வேண்டும் என்றால், பழைய கடப்பாறை அணியாக இம்முறை மும்பை அணி மாறி இருக்கிறது. 

கடைசியாக மோதிய போட்டி

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக மோதிக்கொண்ட போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா சதம் அடித்தும் அந்த அணி தோல்வியை தழுவியது. அதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் பந்து வீச்சாளர் பதிரனா இருந்தார். அவர் அப்போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 
   
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பதிரனா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, சையத் கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் குர்ரான், ஷேக் ரஷீத், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, தீபக் ஹூடா, குர்ஜான்ப்ரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கம்லேஷ் நாகர்கோடி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.

மும்பை இந்தியன்ஸ் அணி

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரெண்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ண் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டோப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயணா ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.

மேலும் படிங்க: IPL 2025: சிஎஸ்கே அணியின் பெரிய ஆயுதம் யார் தெரியுமா? தோனி, பதிரானா இல்லை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.