சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

ராய்ப்பூர்,

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதில் ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கேப்டன் பிரையன் லாரா 6 ரன்களிலும், அடுத்து வந்த வில்லியம் பெர்கின்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கை கோர்த்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் – லெண்டில் சிம்மன்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தது. இதில் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரவி ராம்பால் 2 ரன்களிலும், சாத்விக் வால்டன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்த சிம்மன்ஸ் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் அடித்தது. இந்தியா தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.