மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்சன் காயம் காரணமாக 18வது ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான கார்பின் போஷ் சேர்க்கப்பட்டார்.
கார்பின் போஷ் இன்னும் ஐபிஎல்லில் அறிமுகமாகவில்லை என்றாலும் அவர் முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரிசர்வ் வீரராக இருந்தார். மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் SA20 கோப்பையை வென்ற எம்ஐ கேப் டவுனில் ஒரு பகுதியாக கார்பின் போஷ் இருந்தார். அவர் அந்த தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிபி நோட்டீஸ்
இந்த நிலையில், கார்பின் போஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தை மீறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 30 வயதான கார்பின் போஷ், வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் PSL-இன் பெஷாவர் சல்மியால் டயமண்ட் பிரிவில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாட முடிவு செய்து அவர் PSL-ல் இருந்து விலகினார். இந்த நிலையில் தான் அவருக்கு பிசிபி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அந்த அறிக்கையில், கார்பின் போஷ் தனது தொழில்முறை மற்றும் ஒப்பந்த உறுதிமொழிகளில் இருந்து விலகியதற்கான நியாயமான காரணத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பதிலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தெரிவிக்குமாறும் தெரிவித்துள்ளது. மேலும், அவர் லீக்கில் இருந்து வெளியேறுவதால் ஏற்படும் விளையவுகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோடிட்டு காட்டி உள்ளது.
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிஎஸ்எல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 18 வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025: இந்த அணிதான் கோப்பையை வெல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
மேலும் படிங்க: IPL 2025: ஓய்வுபெறும் இந்த 5 வீரர்கள்… இதுதான் கடைசி ஐபிஎல் தொடர்!