பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையிலிருந்தே இதுகுறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அதுக்குறித்து மருத்துவமனை தரப்பு இன்று மாலைக்குள் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தன் அப்பாவின் உடல்நலம் குறித்து, “அன்புள்ள ஃபேன்கள், குடும்பத்தினர், நலவிரும்பிகள், உங்கள் அனைவரின் அன்பு, பிரார்த்தனை, ஆதரவிற்கு நன்றி. அப்பா Dehydration காரணமாக சற்று பலவீனமாக உணர்ந்தார். அதற்காக, வழக்கமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்தோம். இப்போது அவர் நலமாக இருக்கிறார். உங்களுடைய வார்த்தைகளும், பிரார்த்தனைகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்களுடைய தொடர் ஆதரவுக்கு நன்றிகளும், அன்புகளும்” என்று ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!” என்று பதிவிட்டுள்ளார்.