இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை கோளாறு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழப்பு (Dehydration) காரணமாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலையில் நீரிழப்பு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை குறித்து அவரது சகோதரி, “நீரிழப்பு காரணமா டிரிப்ஸ் ஏத்தினாங்க. இப்போ பரவாயில்ல. டிரவல்னால அவருக்கு டயர்ட் அவ்ளோ தான்” என்று கூறியுள்ளார்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks