WPL : 'தொடர்ச்சியாக மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வி'- மனமுடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மெக் லேனிங்

வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் இறுதிப்போட்டியில் தோற்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு டெல்லி கேப்டன் மெக் லேனிங் மனமுடைந்து பேசியிருக்கிறார்.

Delhi Capitals

மெக் லேனிங் பேசுகையில், ‘நாங்கள் இன்னொரு நல்ல சீசனை விளையாடினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய போட்டியில் மீண்டும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

மும்பை அணிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், ஏனென்றால் அவர்கள் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். மிகவும் சிறப்பாகச் அனைத்து பணிகளையும் செய்தார்கள். எங்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக, பேட்டிங்கில் நாங்கள் சரியாகச் செயல்படவில்லை. 150 ரன்களை சேசிங் செய்வது என்பது எங்களுக்கு ஒரு நல்ல இலக்காக தான் இருந்தது. ஓரிரு ஓவர்களுக்கு இன்னும் ஒரு பார்ட்னர்ஷிப் எங்களுக்கு கிடைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். எங்கள் அணியை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்.

நாங்கள் ஒரு நல்ல சீசனை விளையாடியுள்ளோம். சில நல்ல தருணங்களைக் கடந்து வந்துள்ளோம். ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் அனைவரும் மிகவும் ஏமாற்றமடைந்துவிட்டோம். இன்றிரவு மும்பை எங்களுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் எங்கள் சிறந்த செயல்திறனை நாங்கள் கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால் அது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இது கிரிக்கெட், இதில் யாருடைய தவறும் இல்லை.

Meg Lanning

யாரையும் குறை கூற முடியாது. நாங்கள் முடிந்தவரை சிறப்பாகச் விளையாடத் தயாராக இங்கு வந்தோம். எங்களுக்கு அது நடக்கவில்லை. வெற்றி பெற ஒரு நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் விளையாட்டில் சிலவற்றில் வெற்றிக் கொள்வோம், சிலவற்றில் தோல்வி அடைவோம். இது விளையாட்டில் நடப்பதுதான்.’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.