சென்னை தமிழக அமைச்சர் ரகுபதி பாஜக அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இது குறித்து செய்தியாளர்களிடம், “மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது. அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பா.ஜ.க. பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை […]
