வரும் ஏப்ரல் 1, 2025 முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை அதிகபட்சாக 2 சதவீதம் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பங்குசந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு விலை உயர்த்துவது தவிர்க்க முடியவில்லை என தனது அறிக்கையில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு மாடல்களிலும் வேரியண்ட் வாரியாக எவ்வளவு விலை உயரும் என்ற விபரத்தை பிறகு தெளிவுப்படுத்த வாய்ப்புள்ளது.