வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங் களில் சமர்ப்பிக்கப்படும்.

1.4.25 முதல் 14.4.25 வரை பிரார்த்தனைக்கு பதிவு செய்யவேண்டிய கடைசித் தேதி: 24.3.25

பெட்டிக்காளியம்மன்

1.4.25 முதல் 14.4.25 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த் தனைகள், கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூர் பெட்டிக்காளியம்மன் ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. கொரநாட்டுக் கருப்பூர் அபிராமவல்லி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அருள்பவள்

ஸ்ரீசுந்தரமாகாளியம்மன் எனப்படும் பெட்டிக்காளி. அதிஉக்கிர கசக்தியான அன்னை உறைந்திருக்கும் பேழையானது, குறிப்பிட்ட பூஜை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் – எப்போதும் சார்த்தப்பட்டே இருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் திறக்கப்படும் இந்தப் பெட்டியில் உள்ள அம்மனின் திருவிற்கு நிகழ்த்தப்படும் ஆராதனைகள் மிக விசேஷமானவை. இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுவோருக்கு, காரியஸித்தியும் ஆன்மபலமும் கிட்டும். அற்புதமான இந்த ஆலயத்தில், வாசகர்கள் சகல சௌபாக்கியங்களைப் பெற்று வாழவும், அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.