IPL 2025 CSK vs MI Ticket Price: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் வரும் மார்ச் 23ஆம் தேதி சிஎஸ்கே – மும்பை அணிகள் மோதும் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
CSK vs MI Ticket: சிஎஸ்கே – மும்பை டிக்கெட் எப்போது விற்பனை?
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19ஆம் தேதி காலை 10: 15 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் விற்பனை முழுவதுமாக ஆன்லைனில் நடைபெறுகிறது. மைதானத்தில் டிக்கெட் விற்பனை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. chennaisuperkings.com மற்றும் district.in இணையதளங்களில் நீங்கள் டிக்கெட்டை வாங்கலாம்.
CSK vs MI Ticket: சிஎஸ்கே – மும்பை டிக்கெட் விலை எவ்வளவு?
ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை பல்வேறு அடுக்குகளில் டிக்கெட் விற்பனை நடைபெற இருக்கிறது. அதாவது, C/D/E Lower அடுக்குகளின் டிக்கெட் விலை ரூ.1,700 ஆகும். அதேபோல், I/J/K Upper அடுக்குகளின் டிக்கெட் விலை ரூ.2,500 ஆகும். I/J/K Lower அடுக்குகளின் விலை ரூ.4,000 மற்றும் C/D/E Upper அடுக்குகளின் விலை ரூ.3,500 என தெரிவிக்கப்பட்டுள்ளது. KMK Terrace டிக்கெட்டுகளின் விலை ரூ.7,500 ஆகும்.
CSK vs MI Ticket: சிஎஸ்கே – மும்பை டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை
கடந்தாண்டு முதல் சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. போலி டிக்கெட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்த டிக்கெட்டுகளையும் கள்ளச்சந்தையில் அதிக தொகைக்கு பலரும் விற்பனை செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
CSK vs MI Ticket: பேருந்திலும், மெட்ரோவிலும் இலவசம்
டிக்கெட் விலை ஏதும் அதிகரிப்படவில்லை. KMK Terrace டிக்கெட் மட்டும் கடந்தாண்டு 6,000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மார்ச் 23 அன்று போட்டியை காண்பதற்கு ஆன்லைன் டிக்கெட் எடுத்தவர்கள் சென்னை மாநகர பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் இலவசமாகவே பயணித்துக்கொள்ளலாம்.
CSK vs MI Ticket: விளையாடும் நட்சத்திர வீரர்கள் யார் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்குகிறார். சிஎஸ்கே அணியில் தோனி, அஸ்வின், தூபே, பதிரானா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணியில் விளையாடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் விளையாட மாட்டார். அதேபோல், ஜஸ்பிரித் பும்ராவும் விளையாட மாட்டார் எனலாம்.
கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட் மற்றும் சிஎஸ்கேவில் இருந்து மும்பை அணிக்கு சென்றுள்ள மிட்செல் சான்ட்னர், தீபக் சஹார் ஆகியோர் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம்பெறுவார்கள். சென்னை – மும்பை போட்டி, இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பலோ பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் காரணத்தால் பல்லாயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்க ஆன்லைனில் முண்டியடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.