ஹாரிஸ் ஜெயராஜின் கான்சர்ட் கடந்த சனிக்கிழமை கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜின் எவர் க்ரீன் பாடல்கள் பலவும் இங்கு இசைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, `மக்காமிஷி ‘ பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் நடனமாடிய காணொளியும் சமூக வலை தளங்களில் டிரெண்ட் அடித்து வருகிறது. இந்த கான்சர்ட் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த ஹாரிஸ் AI குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசுகையில், “நண்பன் படத்தோட இசைவெளியீட்டு விழாவுக்காக கோவைக்கு வந்திருந்தேன். இப்போ 13 வருஷத்துக்குப் பிறகு கோவையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துறேன். மக்களோட வரவேற்பு நல்ல வகையில இருக்கு. சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா சாருக்கு என்னுடைய வாழ்த்துகள். திரைப்படங்களைவிட பாடலினுடைய ஆயுசு அதிகமாக இருக்கு. இப்போ இந்த கான்சர்ட்ல பாடப்போகிற பாதி பாடல்கள் புதிய நடிகர்களோட பாடல்தான். அப்படியான பாடகர்களோட ஜீவன் இப்போ வரைக்கும் இருக்கிறதுக்கு காரணம் இசை ரசிகர்கள்தான். மியூசிக் கான்சர்ட்ங்கிற விஷயம் மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் ஆரம்பிச்சது. அது இன்னைக்கு பயங்கரமான வளர்ச்சியை அடைஞ்சிருக்கு. அதுக்கு இசை ரசிகர்களுக்குதான் நன்றி சொல்லணும். AI மூலமாக நாம் இரண்டு நபர்களை அவமதிக்கிறோம். ஒன்னு மறைந்த பாடகர்களை அவமதிக்கிறோம். மற்றொன்று, அந்தப் பாடலைப் பாடும் பாடகர்கள் வெளில தெரியாமல் போயிடுறாங்க. அந்த இடத்துல இரண்டு பாடகர்களுக்கு அவமதிப்பு நடக்குது. கண்டிப்பாக என்னுடைய இசையில் நான் AI பயன்படுத்தமாட்டேன்.” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…