ஐபிஎல் 2025 தொடர் இந்த வாரம் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 23ம் தேதி நடைபெறுகிறது. இரு அணிகளும் வெற்றியுடன் இந்த தொடரை தொடங்க ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு தோனி தனது கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கைக்குவாட்டிடம் கொடுத்தார். இந்த வருடமும் ருதுராஜ் கைக்குவாட் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.
சென்னை அணியின் பிளேயிங் 11
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாடாததால் பெரும் இழப்பாக இருந்தது. இந்த முறை அனைத்து வீரர்களும் விளையாட உள்ளனர். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கைக்குவாட் மற்றும் டெவான் கான்வே களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2023ல் வெற்றி பெறுவதற்கு இந்த தொடக்க ஜோடியும் ஒரு முக்கிய காரணம். கான்வே விளையாடினால் ரச்சின் ரவீந்திராவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். மூன்றாவது இடத்தில் ராகுல் திருப்பாதி களமிறங்குவார். இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை அணி அவரை எடுத்தது. நான்காவது இடத்தில் ஆல் ரவுண்டர் சிவம் துபே களமிறங்க உள்ளார். அதன் பிறகு விஜய் சங்கர் அல்லது தீபக் ஹூடா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
அதைத் தொடர்ந்து சாம் கரன் களமிறங்குவார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணிக்கு மீண்டும் திரும்பி உள்ள சாம் கரன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவரைத் தொடர்ந்து பினிஷிங் ரோலில் ஜடேஜா களமிறங்குவார். கடந்த இரண்டு சீசர்களாக கடைசி ஓவரில் மட்டுமே களமிறங்கும் தோனி இந்த முறை விக்கெட்டுகளை பொறுத்து தனது இடத்தை மாற்றலாம் என்று கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நூர் அகமது அணியில் இடம் பெற உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக மதீஷா பத்திரனா விளையாட உள்ளார். இம்பேக்ட் வீரராக கலில் அகமது அல்லது அன்ஷுல் காம்போஜ் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்ததேச பிளேயிங் 11
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, சாம் குர்ரன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (WK), ஆர் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது.