ஜீப் இந்தியா நிறுவனத்தின் பிரபலமான காம்பஸ் எஸ்யூவி காரில் கூடுதலாக ஆக்செரீஸ் சேர்க்கப்பட்ட சிறப்பு சேன்ட்ஸ்ட்ராம் எடிசன் விலை ரூ.19.49 லட்சத்தில் துவங்கி டாப் மாடல் விலை ரூ. லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள Sports, Longitude, மற்றும் Longitude (O) என மூன்று வேரியண்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கின்ற காரில் தொடர்ந்து 170bhp மற்றும் 350Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் உள்ளது.
பானட்டிலும் பக்கவாட்டிலும் சேன்ட்ஸ்ட்ராம் எடிசன் அடிப்படையிலான கொண்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் முன் ஃபெண்டருக்கு மேற்பகுதியில் சேன்ட்ஸ்ட்ராம் எடிசன் பேட்ஜ். உடன் காம்பஸின் உட்புறத்தில் புதிய இருக்கை கவர், சுற்றுப்புற விளக்குகள், முன் மற்றும் பின்புற டேஷ் கேம்கள், புதிய தரை விரிப்புகள் மற்றும் கூடுதல் சேன்ட்ஸ்ட்ராம் எடிசன் பேட்ஜ் ஆகியவை பெற்றுள்ளது.
- Jeep Compass Sandstorm Edition Sports ரூ.19.49 லட்சம்
- Longitude – ரூ. 22.83 லட்சம்
- Longitude (O) ரூ.25.33 லட்சம்
- Longitude (O) AT ரூ.27.33 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம்)