90s, 2k கிட்ஸ் என எவராலும் மறக்க முடியாத ஒன்று WWE. சிறு வயதில் பள்ளியை முடித்த கையோடு டிவி முன் அமர்ந்து ஆர்வமுடன் பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது WWE மல்யுத்த போட்டி தான். அப்படி ஒவ்வொருவரின் வாழ்வின் அங்கமாக இருந்தது டபிள்யூ டபிள்யூ போட்டி. அண்டர்டேக்கர், ஜான் சீனா, கோல்ட்பர்க், ராக், Triple H என நமக்கு பிடித்தவர்களை கொண்டு நமது நண்பர்களுடன் எனது ஹிரோ தான் பெரியது என மல்லுக்கட்டுவதுண்டு.
அதேபோல், சில காலம் வரை WWE ஒரு போட்டிதான், உண்மையில் ஒருவருக்கொருவர் சண்டைப்போட்டுக்கொள்வதல்ல என்பதை காலப்போக்கில் தெரியவந்தபோது, அதை நினைத்து நாம் சிரித்திருப்போம். அந்த வகையில், டபிள்யூ டபிள்யூ இ போட்டிகளை டென் ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி நிறுவனம் ஒளிப்பரப்பு செய்து வந்தது. +
மேலும் படிங்க: பரிதாப நிலையில் லக்னோ அணி.. வேறு வழியின்றி ஷர்துல் தாக்கூரிடம் சென்ற சஞ்சீவ் கோயங்கா!
இனி டிவி சேனல்களில் பார்க்க முடியாது
இந்த நிலையில், டபிள்யூ டபிள்யூ மல்யுத்த போட்டிகள் இனி ஏப்ரல் மாதம் முதல் டிவி சேனல்களில் பார்க்க முடியாது என்ற அதிர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் டிவி பார்ப்பது குறைந்து, ஓடிடியை நோக்கி சென்று கொண்டிருப்ப்தால், டபிள்யூ டபிள்யூ இ மல்யுத்த போட்டிகளை இனி டிவியில் ஒளிபரப்பப் போவதில்லை என அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான ட்ரிபிள் ஹெச் தெரிவித்துள்ளார்.
இதனால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிவி சேனல்களில் டபிள்யூ டபிள்யூ இ மல்யுத்த போட்டிகளை காண முடியாது. மாறாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸில் ஒளிபரப்பு ஆகும். WWE மல்யுத்த போட்டிக்கென நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. மாதம் ரூ.199 செலுத்தினால் மொபைல் மற்றும் டிவியில் நெட்ஃப்லிக்ஸ் மூலம் பார்க்கலாம்.
ரசிகர்கள் வருத்தம்
இதற்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், பயங்கர எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. தொலைக்காட்சி கலாச்சாரம் அழிவதையே இந்த முடிவு காட்டுவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அதேபோல் இதற்காக மாதந்தோறும் நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
மேலும் படிங்க: RCB vs KKR: இரு அணிகளின் இம்பாக்ட் பிளேயர் யார்? பிளேயிங் XI இதோ!