ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைபற்றியது. இந்திய அணியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களும் பாடுபட்டனர். அதில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். 4வது இடத்தில் இறங்கி இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தது மட்டுமல்லாமல் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்களை இழந்து வெளியெறிய நிலையில், அவர் விக்கெட்டை காத்து விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றோருடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்தார்.
முன்னதாக அவர் ஷார்ட் பால்களுக்கு எதிராக கடுமையாக தடுமாறி விக்கெட்களை இழந்து வந்தார். எதிரணிகளும் அவரது பலவீனத்தை தங்களது பலமாக மாற்றி அவரது விக்கெட்களை சாய்த்து வந்தனர். இதனால் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் இதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் பலவீனத்தை உணர்ந்து கடின பயிற்சிகளை மேற்கொண்டார் ஸ்ரேயாஸ் ஐயர்.
மேலும் படிங்க: 17 ஆண்டுகளாக ஏன் ஆர்சிபி சாம்பியன் ஆகவில்லை.. காரணத்தை போட்டு உடைத்த முன்னாள் ஆர்சிபி வீரர்!
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் வீசப்பட்ட ஷார்ட் பால்களை எல்லாம் பவுண்டரிகளாக மாற்றினார். அதையே சாம்பியன்ஸ் டிராபியிலும் செய்து அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததே என்னை விமர்சித்தவர்களுக்கு மெசேஜ் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
பலவீனமே முன்னேற்றத்திற்கு காரணம்
இது குறித்து அவர் கூறியதாவது, சாம்பியன்ஸ் டிராபியின் வெற்றி திருப்திகரமாக இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சதம் விளாசி இருந்தால் இன்னும் திருப்தியாக இருந்திருக்கும். ஆனால் அதை நினைத்து கவலைப்படவில்லை. எனது அணியை நல்ல நிலைக்கு எடுத்து சென்று வெற்றி பெற உதவியதே பெரிதாக கருதுகிறேன். அது தன்னம்பிக்கை அளவிலும் எனக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது.
அதேபோல் இந்த ஆண்டு விளையாடிய உள்ளூர் போட்டிகளிலும் ஷார்ட் பால்களில் நிறைய சிக்சர்கள் அடித்துள்ளேன். அதிலிருந்து டெக்னிக்கல் அளவில் நல்ல அடித்தளத்தை உருவாக்கினேன். கற்றுக்கொண்ட டெக்னிக்கை இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து பின்பற்றினேன். நான் யாருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று எந்த மேசேஜும் அனுப்பவில்லை. என் மேல் தன்னம்பிக்கை வைத்து நல்ல கிரிக்கெட்டை ஆடினாலே தாமாக மெசேஜ் சென்றுவிடும் எனக் கூறினார்.
மேலும் படிங்க: ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய 5 வீரர்கள்.. இவர்களுக்கு பதில் யார்?