நாக்பூரில் திங்கள்கிழமை நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். ‘சாவா’ படம் ஔரங்கசீப்பிற்கு எதிராக மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டதாக ஃபட்னாவிஸ் சட்டமன்றத்தில் கூறினார். பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான இந்தப் படம் குறித்த சர்ச்சைகள் தொடரும் நிலையில் அது இப்போது மகாராஷ்டிராவில் வன்முறையாக மாறியுள்ளது. அவுரங்காபாத் மாவட்டம் குல்தாபாத் எனும் இடத்தில் உள்ள ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று சங்பரிவார் அமைப்புகள் கோரிக்கை வைத்ததுடன் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். […]
