அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் ஆவணங்களில் ஒன்று ஓட்டுனர் உரிமம். ஓட்டுனர் உரிமம் என்பது ஒரு தனிநபர், பொது சாலையில் மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கு சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்கும் ஒரு ஆவணமாக உள்ளது. சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை பற்றி ஒருவர் எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளார் என்பதனை RTO அலுவலகத்தில் சோதனை செய்து, அதன் பின் உங்களுக்கு இந்த ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். ஒருவர் அந்த சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாக ஓட்டுநர் உரிமம் உள்ளது.
இந்நிலையில் இந்த ஓட்டுநர் உரிமம் இன்னுமும் நீங்கள் பெறவில்லை என்றால், அதற்காக விண்ணப்பிக்க முதலில் நீங்கள் பயிற்சி உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி ஓட்டுநர் உரிமத்தை பெற்றப் பிறகு தான், நீங்கள் நிரந்தர ஓட்டுநர் உரிமத்தை பெற முடியும். எனவே ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சரியான செயல்முறை உங்களுக்குத் தெரியாவில்லை என்றால் இந்த கட்டுரையை முழுவையாக படுக்கவும்.
பயிற்சி ஓட்டுநர் உரிமத்திற்கு (LLR – Learner’s License | Parivahan Sewa) ஆன்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள் பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்:
1. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) அதிகாரப்பூர்வ வலைத்தளமான sarathi.parivahan.gov.in ஐப் பார்வையிடவும்.
2. “ஆன்லைன் சேவைகள்” என்பதை கிளிக் செய்யவும்.
3. “பயிற்சி உரிமம்” என்கிற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
4. உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
5. “விண்ணப்பதாரர்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
6. உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
7. “OTP உருவாக்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.
8. உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.
9. “சமர்ப்பி” என்கிற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
10. இப்போது நீங்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
11. விண்ணப்பப் படிவத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், கல்வித் தகுதி, முகவரி மற்றும் பிற தேவையான விவரங்களை உள்ளிடவும்.
11. உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.
12. “கட்டணங்கள்” என்பதை கிளிக் செய்யவும்.
13. உங்கள் மாநில அரசு நிர்ணயித்த கட்டணங்களைச் செலுத்துங்கள்.
14. “சமர்ப்பி” என்பதைக் கிளிக் செய்யவும்.
15. உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலே தெரிந்துக்கொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் அட்டை
2. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
3. கையொப்பம்
4. கட்டணம்
விண்ணப்ப எண் அல்லது வழங்கப்பட்ட ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்கலாம்.