Realme நிறுவனமானது தற்போது தனது புதிய ஸ்மார்ட்போன் அதாவது Realme P3 அறிமுகம் படுத்த உள்ளது. இதற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை தேதி மற்றும் அம்சங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம். இனிடையே இந்த ஸ்மார்ட்போன் நாளை அதாவது மார்ச் 19 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஸ்பேஸ் சில்வர், காமெட் கிரே, நெபுளா பிங்க் கலர்கள் உள்ளன. இந்த ரியல்மி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999 ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 அறிமுக சலுகை போக ரூ.14,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.
More power. More features. Same price! #SlayWithPower
Truly an all-round upgrade, the #realmeP35G has Snapdragon 6 Gen 4, 6000mAh battery, IP69 rating & AMOLED display – all for just ₹14,999!
Early Bird Sale on March 19 at 6 PM!https://t.co/0AoBoXjsSn https://t.co/Nl2D7sS2KM pic.twitter.com/tp2K2zZh6t
— realme (@realmeIndia) March 17, 2025
Realme P3: இந்தியாவில் விலை மற்றும் வெரியண்ட்ஸ்
ரியல்மி பி3 மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியா டுடே அறிக்கையின்படி, அவற்றின் விலை பின்வருமாறு:
6GB RAM + 128GB ஸ்டோரேஜ் – ரூ.16,999
8GB RAM + 128GB ஸ்டோரேஜ் – ரூ.17,999
8GB RAM + 256GB ஸ்டோரேஜ் – ரூ.19,999
இருப்பினும், வங்கி கொடுக்கும் சலுகையின்படி, வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 தள்ளுபடி இதில் வழங்கப்படும், அந்த வகையில் இதன் விலை:
• 6GB + 128GB வெரியண்ட்ஸ் – ரூ.14,999
• 8GB + 128GB வெரியண்ட்ஸ் – ரூ.15,999
• 8GB + 256GB வெரியண்ட்ஸ் – ரூ.17,999
இந்த வங்கி சலுகை எந்த வங்கிகளுக்கு பொருந்தும் என்பது தற்போது தெரியவில்லை, எனினும் இது தொடர்பான முழு விவரம் நாளை அறிவிக்கப்படும். முகப்படுத்தப்பட்ட இந்த சலுகை “முன்கூட்டியே முன்பதிவு செய்யும் சலுகை” என்பதன் கீழ் வழங்கப்படுகிறது.
Realme P3 விற்பனை விவரம்:
Realme P3 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நாளை மார்ச் 19 ஆம் தேதி மாலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். இந்த ஸ்மார்ட்போனை Realme இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் தளத்தின் மூலம் வாங்கலாம்.
Realme P3 இன் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:
அறிமுகத்திற்கு முன்பே, நிறுவனம் Realme P3 இன் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்களை வெளியிட்டுள்ளது-
• புரொசர்: Qualcomm Snapdragon 6 Gen 4 சிப்செட்
• பேட்டரி: 6,000mAh பேட்டரி + 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
• டிஸ்ப்ளே: 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் AMOLED பேனல்
• ப்ரோடெக்ஷன்: IP69 சர்டிஃபிகேஷன் (தூசி மற்றும் நீர் பாதுகாப்பு)
• ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ்: 6GB/128GB, 8GB/128GB, 8GB/256GB