ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து பாஃப் டு பிளெசிஸ் வெளியேறிய பின்னர், விராட் கோலி கேப்டனாக மீண்டும் வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டார். பாஃப் டு பிளெசிஸ் சென்ற நிலையில், ரஜத் படிதரின் கேப்டன்சி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், ரஜத் படிதார் ஆர்சிபி கேப்டனாக எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து ஏபி டி வில்லியர்ஸ் பேசி இருக்கிறார்.
இது ரஜத் படிதருக்கு நல்ல வாய்ப்பு
இது குறித்து அவர் கூறியதாவது, கேப்டனாக விராட் கோலி, பாஃப் டு பிளெசிஸ் இருந்த இடத்தை ரஜத் படிதார் நிறப்புவதே மிகப்பெரிய சவால். அவர் அந்த பதவிக்கான அழுத்தத்தை தலையில் ஏற்றிக்கொள்ளாமல், தான் யார் என்பதை உணர்ந்து செயல்பட்டாலே சிறப்பாக செயல்பட முடியும். அதேபோல், அவருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அவர் விராட் கோலி, ஆண்டி பிளவர் மற்றும் மற்ற வீரர்களின் அனுபவத்தை பயன்படுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் படிங்க: 17 ஆண்டுகளாக ஏன் ஆர்சிபி சாம்பியன் ஆகவில்லை.. காரணத்தை போட்டு உடைத்த முன்னாள் ஆர்சிபி வீரர்!
விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த வேண்டாம்
தொடர்ந்து பேசிய ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலியின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட்டினை பற்றி பேசினார். இம்முறை அவர் பில் சால்ட்டுடன் விளையாடுவதால், அவர் ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன். அதிரடியாக விளையாட கூடிய ஒருவர் பில் சால்ட். எனவே விராட் கோலி மீதான அழுத்தத்தை பில் சால்ட் நீக்கிவிடுவார். இதுவரை விராட் கோலி என்ன செய்தாரோ அதை செய்தாலே போதுமானது. எப்போது நிதானமாக ஆட வேண்டும். எப்போது அதிரடியாக ஆட வேண்டும் என்பது அவருக்கே தெரியும்.
கடந்த சீசன்களில் விராட் கோலி மீது தேவையற்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. வெளியே இருந்து வரும் விமர்சனங்கள் சிறிதளவாவது அவரது பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவரும் மனிதர்தான். ஆனால் விராட் கோலி எப்போதும் அணிக்காக சிறப்பாக விளையாடுவார். தேவைப்படும் நேரத்தில் அணிக்காக வெற்றியை தேடித் தந்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும் படிங்க: ஷிகர் தவான் to ஹர்பஜன் சிங்: சினிமாவிற்கு சென்று மொக்கை வாங்கிய 5 கிரிக்கெட் வீரர்கள்