வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் தொலைபேசி எண்கள் மற்றும் ஆதார் எண்களை இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என தலைமை தேர்தல் […]
