1000KW சார்ஜரை கொண்டு 5 நிமிடத்தில் 400 கிமீ ரேஞ்ச் தரும் BYD விரைவு சார்ஜர்..! | Automobile Tamilan

1MW அல்லது 1000KW சார்ஜரை கொண்டு 1 நொடிக்கு 2 கிமீ என 5 நிமிடத்தில் 400 கிமீ பயணிக்கின்ற திறன் வரை பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலான பிஓய்டி Super E-Platform அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், சீன சந்தையில் முதன்முறையாக இந்த சார்ஜிங் நுட்பத்தை பெற்ற Han L செடான் மற்றும் Tang L எஸ்யூவி மாடலை 270,000 yuan (ரூ. 32,31,497) ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் நிரப்பும் வாகனங்களுக்கு இணையான நேரத்தில் சார்ஜிங் செய்து கொள்ளும் வகையிலான நுட்பத்தை பிஓய்டி கொண்டு வந்துள்ளதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை மிக வேகமாக வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.  இந்த நுட்பம் டெஸ்லாவின் தற்போதைய 500kW சூப்பர்சார்ஜர்களை விட இரு மடங்கு வேகமாக செயல்படுகின்றது.

இந்த புதிய நுட்பத்திற்கான பேட்டரி ஆனது அதிகபட்ச சார்ஜிங் மின்னழுத்தம் 1000V
︎அதிகபட்ச சார்ஜிங் மின்னோட்டம் 1000A வரை ஆதரிக்கும் திறனுடன் விளங்கும் என இந்நிறுவனத்தின் தலைவரை வாங் சுவான்ஃபு தெரிவித்துள்ளார்.

ஹான் L செடான் போன்ற புதிய EV மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வருவதனால், BYD, சீனாவில் 4,000 க்கும் மேற்பட்ட சூப்பர்சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான செயல்திட்டங்களை துவங்கியுள்ளது.
BYD நிறுவனம் டெஸ்லா உள்ளிட்ட மற்ற முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களை விட பல்வேறு நவீன நுட்பங்களை அறிமுகம் செய்வதில் மிகவும் முன்னோடியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.