17 ஆண்டுகளாக ஏன் ஆர்சிபி சாம்பியன் ஆகவில்லை.. காரணத்தை போட்டு உடைத்த முன்னாள் ஆர்சிபி வீரர்!

ஐபிஎல் தொடர் தொடங்கி 17 சீசன்கள் நிறைவடைந்துவிட்டது. எதிர்பார்க்காத அணிகள் எல்லாம் கோப்பையை வென்றுவிட்டது. ஆனால் திறமையான வீரர்கள், மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் என அனைத்தையும் வைத்திருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஏன் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வெல்லவில்லை

இந்த நிலையில்தான், ஆர்சிபி அணி ஏன் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறித்து சிஎஸ்கே, ஆர்சிபி அணியில் விளையாடிய சதாப் ஜக்காத்தி பேசி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், கிரிக்கெட் எனது ஒரு அணி விளையாட்டு. கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், ஒட்டுமொத்த அணியின் வீரர்களும் அதற்கான முழு முயற்சியை வழங்கவேண்டும். வெறும் 2-3 வீரர்கள் மட்டும் விளையாடினால் கோப்பையை வெல்ல முடியாது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த இந்திய வீரர்களும் சிறந்த வெளிநாட்டு வீரர்களும் இருந்தனர். அவர்கள் இணைந்து விளையாடுவார்கள். ஒரு அணிக்கு பலம் வாய்ந்த வீரர்களை தேர்வு செய்வது முக்கியம். ஆனால் நான் ஆர்சிபி அணியில் இருந்தபோது, 2 அல்லது 3 வீரர்கள் தான் வெல்ல வேண்டும் என நினைப்பார்கள். ஆர்சிபி வீரர்களிடையே பெரிய நட்புறவை நான் காணவில்லை. 

மேலும் படிங்க: ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய 5 வீரர்கள்.. இவர்களுக்கு பதில் யார்?

அணி நிர்வாகத்திடம் இருக்கும் வித்தியாசம்

அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகம், ஆர்சிபி அணி நிர்வாகத்தை ஓப்பிடும் போது பெரிய வித்தியாசம் உள்ளது. வீரர்கள் அனைவரும் நன்றாகதான் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் நல்ல நட்புணர்வு இல்லை. அனைத்து வீரர்களும் தனித்தனியாக தானே இருப்பார்களே தவிர ஒருவருடன் ஒருவர் கலக்க மாட்டார்கள். 

ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த விஷயத்தில் மிக சிறப்பாக செயல்பட்டிருந்தது. அவர்கள் ஒவ்வொரு வீரர்களையும் நன்றாக கவனித்துக்கொள்வார்கள். இது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே இந்த வித்தியாசத்தைதான் நான் பார்க்கிறேன் என சதாப் ஜக்காத்தி தெரிவித்தார்.  

சதாப் ஜக்காத்தி முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை  விளையாடினார். அதற்கு பின்னர் அவர் 2014ல் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: இந்த 3 முக்கிய வீரர்கள் இல்லை.. சிஎஸ்கே அணிக்கு ஆபத்தா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.