Airtel சூப்பர் ரீசார்ஜ் பிளான்.. 84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா

Airtel 84 Days Recharge Plan Details: இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் வோடபோன் ஐடியா (vi), ஜியோ (Jio), ஏர்டெல்(Airtel) உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மற்ற நிறுவனங்களை காட்டினாலும் மலிவான விலையில் பிஎஸ்என்எல் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருந்தாலும், மற்ற மூன்று நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்காத சில அம்சங்களையும் வழங்கி வருகிறது. அதிலும் ஏர்டெல் நிறுவனம் மக்களுக்கு நல்ல நெட்வொர்க் மற்றும் பல மலிவான மற்றும் உபயோகமான ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் (Airtel Prepaid Recharge Plan) கூடுதல் சலுகைகளையும் தற்போது வழங்குகி வருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தற்போது 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பல நன்மைகளை நீங்கள் பெறலாம். இந்தத் திட்டத்தைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் காணலாம். 

ஏர்டெல்லின் வியக்க வைக்கும் ரீசார்ஜ் திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் தற்போது பல்வேறு விலை வரம்புகளில் பலவித ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பயனர்கள் தங்களின் பட்ஜெட் மற்றும் வசதிக்கேற்ப ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம். ஆனால், இப்போது நாம் காணப் போகும் ரீசார்ஜ் பிளானின் விலை ரூ.979 ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல்லின் வலைத்தளத்தில் உள்ள “ட்ரூலி அன்லிமிடெட்” பிரிவில் நீங்கள் காணலாம்.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan):
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் நீங்கள் தினசரி 2ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். குறிப்பாக வேலிடிட்டி காலம் இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு கிடைக்கும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி ஐ பெற முடியும். இது தவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் மொத்தம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை இந்த ரீசார்ஜ் திட்டத்ததில் பெறலாம். அதனுடன் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.