India bound Tesla Model 3 Range – இந்தியா வரவுள்ள டெஸ்லா மாடல் 3 காரின் முக்கிய சிறப்புகள்.! | Automobile Tamilan

இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் முதல் மாடலாக மாடல் 3 செடான் மற்றும் மாடல் Y எஸ்யூவி என இரண்டையும் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்திய சந்தையில் விற்பனை அனுமதி பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tesla Model 3

நமது சந்தைக்கு வரவுள்ள மாடல் 3 எந்த வேரியண்ட் விற்பனைக்கு வரும் என உறுதியாக தெரியவில்லை, இருந்த பொழுதும் சர்வதேச அளவில் ஸ்டான்டர்டு RWD, லாங்-ரேஞ்ச் AWD, லாங்-ரேஞ்ச் RWD மற்றும் பெர்ஃபாமென்ஸ் என நான்கு விதமாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

  • ஆரம்ப நிலை ஸ்டான்டர்டு RWD மாடலில் 52.7 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 512 கிமீ ரேஞ்ச் வழங்கும் என WLTP சான்றிதழ் பெற்றுள்ளது.
  • லாங்-ரேஞ்ச் RWD வேரியண்டில் 82 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 702 கிமீ ரேஞ்ச் வழங்கும் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • லாங்-ரேஞ்ச் AWD வேரியண்டில் 82 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 629 கிமீ ரேஞ்ச் வழங்கும் என WLTP சான்றிதழ் பெற்றுள்ளது.
  • இறுதியாக, பெர்ஃபாமென்ஸ் ரக AWD வேரியண்ட் 82 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 528 கிமீ ரேஞ்ச் வழங்கும் என WLTP கூறியுள்ளது.

மற்ற மூன்று வேரியண்டுகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 201 கிமீ ஆகவும், டாப் பெர்ஃபாமென்ஸ் ரக AWD வேகம் மணிக்கு 262 கிமீ ஆக உள்ளது.


tesla model 3 interior

18 அல்லது 19 அங்குல அலாய் வீல் பெற்றுள்ள மாடலின் இன்டீரியரில் 15.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று கூடுதலாக 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பின்புற இருக்கையில் பெற்றுள்ளது.

இந்தியாவில் முதல் டீலரை மும்பையில் துவங்க திட்டமிட்டுள்ள டெஸ்லா அதனை தொடர்ந்து டெல்லியிலும் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், உற்பத்தி ஆலை குறித்தான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்பொழுது வரை வெளியிடவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.