ஆர்சிபி இந்த வருடமாவது கோப்பையை வெல்லுமா? பலம், பலவீனம் என்ன? பிளேயிங் XI?

வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. இத்தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஆர்சிபி அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றனர். 

இம்முறை ஆர்சிபி அணி புது தோற்றத்துடன் இருக்கின்றது. புதிய வீரர்கள் புதிய கேப்டன் என புது முகத்துடன் இம்முறை ஐபிஎல் தொடரை எதிர்கொள்கிறது. கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேப்டனாக்கப்பட்டது குறித்து கோலியும் பெருமையாக பேசி இருக்கிறார். எனவே 17 ஆண்டுகளாக வெல்லாத கோப்பையை இம்முறை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்குகின்றனர். இந்த நிலையில், ஆர்சிபி அணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

பலம் என்ன? 

ஆர்சிபி அணியில் பில் சால்ட், லிவ்விங்ஸ்டன், படிக்கல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களாக விராட் கோலி – பில் சால்ட் இறங்க வாய்ப்புள்ளது. பில் சால்ட் அதிரடியாக விளையாட கூடியவர். எனவே விராட் கோலி மறுபுறம் பொருமையாக ரன்களை சேர்க்கலாம். அதேபோல் மிடில் ஆர்டரில் நிதானமாக ஆட படிதார் இருக்கிறார். அதிரடியாக ஆட லிவ்விங்ஸ்டன், டிம் டேவிட் போன்றோர்கள் இருக்கிறார்கள். 

மேலும் படிங்க: இந்த வயதிலும் ஏன் ஐபிஎல் விளையாடுகிறாய்? தோனியிடமே கேட்ட ஹர்பஜன்

 

பந்து வீச்சை எடுத்துக்கொண்டால், புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். கூடுதலாக யாஷ் தயால் போன்ற இளம் வீரர்கள் இருக்கின்றனர். 

பலவீனம் என்ன? 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலவீனம் என்று பார்த்தால், அது சூழற்பந்து வீச்சில் தான். சாஹல் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இல்லை. குர்னால் பாண்டியா, சுயாஷ் ஷர்மா போன்றவர்கள் தான் இருக்கின்றனர். சொல்லும்படி ஸ்பின்னர்கள் இல்லாதது அந்த அணிக்கு பலவீனமாக அமையலாம். மேலும், x factor ஆக குர்னால் மற்றும் ஸ்வாப்னில் சிங் இருப்பார்கள். இந்த இருவரும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் ஆர்சிபி அணிக்கு வெற்றி நிச்சயம். 

ஆர்சிபி-யின் கணிக்கப்பட்ட பிளேயிங் XI

பில் சால்ட் (விகீ), விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), தேவுதட் படிக்கல், லியாம் லிவிங்ஸ்டன், குர்னால் பாண்டியா, டிம் டேவிட், ஸ்வாப்னில் சிங், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தர். 

மேலும் படிங்க: CSK vs MI: அதிக போட்டிகளை வென்று‌ ஆதிக்கம் செலுத்திய அணி‌ எது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.