2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருடன் பல முன்னணி வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமானவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி.
இன்று வரை சென்னை ரசிகர்கள் சிலர் ஐபிஎல்லை விரும்புவது தோனிக்காகதான். ஐபிஎல்லில் தோனியின் பார்ப்பதற்காகவே பலர் மைதானத்திற்கு வருகிறார்கள். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் தோனி தொடர்ந்து ஐபிஎல் விளையாடி வருகிறார்.
அதேபோல் தோனிக்கு இந்த சீசன் தான் கடைசியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 43 வயதான தோனி ஏன் ஐபிஎல் போல ஒரு பெரிய தொடரில் விளையாட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த கேள்வியை தோனியிடமே கேட்டதாகவும் அதற்கு அவர் பதில் அளித்ததாக்வும் கூறி இருக்கிறார்.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025: IPL Ball Boy to பஞ்சாப் கேப்டன்.. ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!
இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் தோனியை சந்தித்தேன். அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார். நான் அவரிடம் கேட்டேன், உனக்கு இது கடினமாக இல்லையா? என்று, அதற்கு ‘நிச்சயமாக எனக்கு இது கடினமாக இருக்கிறது. ஆனால் இதை நான் பிடித்துதான் செய்கிறேன். மாலை நேரம் ஆனால் உடனே பேட்டை எடுத்துக்கொண்டு விளையாட சென்று விடுகிறேன். வாழ்நாள் முழுக்க இதைதான் செய்து வருகிறேன். உங்களுக்கு விளையாட வேண்டும் என தோன்றும் வரை உங்களால் இதை செய்ய முடியும் என பதில் அளித்தார் என ஹர்பஜன் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஹர்பஜன், எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் கலந்து கொள்ளாமல் திடீரென ஐபிஎல் மாதிரியான பெரிய தொடரில் விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என தோனி மற்றவர்களுக்கு காட்டுகிறார். ஐபிஎல் விளையாடினால் போதும் என சாதாரனமாக அவர் விளையாடவில்லை. பந்து வீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்திகிறார். கடின பயிற்சிகளை மேற்கொள்கிறார். தொடர் தொடங்குவதற்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பாகவே அவர் இதை செய்கிறார் என தெரிவித்தார்.
மேலும் படிங்க: CSK vs MI: அதிக போட்டிகளை வென்று ஆதிக்கம் செலுத்திய அணி எது?