சென்னை கோடைக்காலத்தில் தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கள நடவடிக்கைகளை தற்போதே தொடங்கி விட்டன. அரசியல் கட்சிகள் மக்கள் நலத்திட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழக […]
