புளோரிடா,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் கமிலா ரகிமோவா, சக நாட்டவரான அன்னா பிளிங்கோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த அன்னா பிளிங்கோவா ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கமிலா ரகிமோவாவை வீழ்த்தி அன்னா பிளிங்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Related Tags :