ரூ. 16,999 விலையில் Realme P3 அறிமுகம்.. மாஸ் காட்டும் அம்சங்கள்

Realme நிறுவனமானது தற்போது தனது புதிய ஸ்மார்ட்போன் அதாவது Realme P3, P3 Ultra ஸ்மார்ட்போனை தற்போது இன்று அறிமுகம் படுத்தி உள்ளது. P3 வேரியண்டின் விலை ரூ.16,999 இல் தொடங்குகிறது. அதே நேரத்தில், Ultra வேரியண்டின் விலை ரூ.26,999 முதல் தொடங்குகிறது. வெண்ணிலா வேரியண்டை மேம்படுத்தும் விதமாக, P3 குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 4 சிப்செட் மற்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மறுபுறம், Realme P3 Ultra ஆனது MediaTek Dimensity 8350 Ultra சிப் மூலம் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரத்தை இங்கே காணலாம். 

Realme P3, P3 Ultra: விலை
அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் Realme P3-யின் விலை, விற்பனை தேதிகள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகளை Realme அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 

— 6GB RAM and 128GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 16,999
— 8GB RAM and 128GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 17,999
— 8GB RAM and 256GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 19,999

இதனிடையே நிறுவனம் ரூ.2,000 வங்கிச் சலுகையையும் இதில்  வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு முதல் தொடங்கும். முதல் விற்பனையானது மார்ச் 26 முதல் தொடங்குகிறது, மேலும் இந்த போன் Realme ஸ்டோர் செயலி, Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

The new #realmeP3Ultra5G is here, and so is your chance to battle BGMI G.O.A.T, Jonathan!

Enter the #UltraSlayChallenge for a shot at epic prizes & giveaways.

Join the LIVE stream now!https://t.co/48Oy9ZG72Q pic.twitter.com/CkQFWWcDkv

— realme (@realmeIndia) March 19, 2025

Realme P3 Ultra பற்றி பேசுகையில் நிறுவனம் இந்த போனை ரூ.26,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 

— 8GB RAM and 128GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 26,999
— 8GB RAM and 256GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 27,999
— 12GB RAM and 256GB ஸ்டோரேஜ், விலை at ரூபாய் 29,999

இதனிடையே மூன்று வகைகளிலும் ரூ.2,000 வங்கி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். 

Realme P3 இன் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:
அறிமுகத்திற்கு முன்பே, நிறுவனம் Realme P3 இன் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்களை வெளியிட்டுள்ளது-
• புரொசர்: Qualcomm Snapdragon 6 Gen 4 சிப்செட்
• பேட்டரி: 6,000mAh பேட்டரி + 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
• டிஸ்ப்ளே: 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் AMOLED பேனல்
• ப்ரோடெக்ஷன்: IP69 சர்டிஃபிகேஷன் (தூசி மற்றும் நீர் பாதுகாப்பு)
• ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ்: 6GB/128GB, 8GB/128GB, 8GB/256GB

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.