2025 Maruti Dzire Tour S – மாருதி சுசூகியின் 2025 டிசையர் டூர் S விற்பனைக்கு வெளியானது – Automobile Tamilan

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற நான்காவது தலைமுறை டிசையர் செடானின் அடிப்படையில் டாக்சி சந்தைக்கான டூர் எஸ் விற்பனைக்கு ரூ.6.79 லட்சம் முதல் ரூ.7.74 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிசையர் டூர் எஸ் காரில் புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. இதன் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக  மேனுவல் இடம் பெற்றுள்ளது. டிசையர் காரின்  மைலேஜ் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வெளிப்படுத்தும்.

சிஎன்ஜி ஆப்ஷனில் வரும்பொழுது பவர் 69bhp மற்றும் 102Nm டார்க் வழங்கி ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட உள்ளது.  சிஎன்ஜி காரில் 5 வேக மேனுவல் பொருத்தப்பட்ட மாடல் 33.73 Km/kg வழங்கும் என ARAI உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

LXi வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு வந்துள்ள வர்த்தக பயன்பாடிற்கான காரில் 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், ஹீல் ஹோல்டு அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு பெற்றதாக கிடைக்கின்றது.

  • Tour S STD – ₹ 6,79,000
  • Tour S CNG – ₹ 7,74,000

(EX-Showroom Delhi)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.