Tata Cars – ஏப்ரல் 1 முதல் டாடா கார்களின் விலை 3 % வரை உயருகின்றது – Automobile Tamilan

டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்களை தொடர்ந்து பயணிகள் வாகனங்கள் விலை 3 % வரை உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ICE மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களும் விலை உயர்த்தப்பட உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ” உற்பத்தி மூலப்பொருட்களின் செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்ய இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுகிறது.” மாடல் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என இந்நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் வேரியண்ட் வாரியான விலையை தற்பொழுது அறிவிக்கவில்லை.

ஏற்கனவே, கியா இந்தியா, மாருதி சுசூகி என இரு நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளதால் மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து விலை உயர்த்த வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.