இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற பிஎம்டபிள்யூ குழுமத்தின் மினி, பிஎம்டபிள்யூ கார்களின் விலையை அதிகபட்சமாக 3% வரை உயர்த்தியுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் லாங் வீல்பேஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் லாங் வீல்பேஸ், பிஎம்டபிள்யூ X1, பிஎம்டபிள்யூ X3, பிஎம்டபிள்யூ X5, பிஎம்டபிள்யூ X7, பிஎம்டபிள்யூ M340i மற்றும் எலக்ட்ரிக் பிஎம்டபிள்யூ X1 லாங் வீல்பேஸ் ஆகியவை அடங்கும்.
முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட மாடல்களில் பிஎம்டபிள்யூ i4, பிஎம்டபிள்யூ i5, பிஎம்டபிள்யூ i7, பிஎம்டபிள்யூ i7 M70, பிஎம்டபிள்யூ iX, பிஎம்டபிள்யூ Z4 M40i, பிஎம்டபிள்யூ M2 கூபே, பிஎம்டபிள்யூ M4 காம்பெட்டிஷன், பிஎம்டபிள்யூ M4 CS, பிஎம்டபிள்யூ M5, பிஎம்டபிள்யூ M8 காம்பெட்டிஷன் கூபே மற்றும் BMW XM ஹைப்ரிட் ஆகியவை அடங்கும். MINI கூப்பர் S மற்றும் அனைத்து எலக்ட்ரிக் மினி கன்ட்ரிமேன் ஆகிய இந்தியாவில் உள்ள MINI வரிசையும் விலை உயர்த்தப்பட உள்ளது