72வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் 2025 மே 7 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதைப் பிரபலப்படுத்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா மார்ச் 18ம் தேதி ஹைதராபாத் வந்துள்ளார். அவர் நேற்று தெலுங்கானாவின் யாதகிரிகுட்டாவில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, பாரம்பரிய இந்திய புடவை அணிந்து, கோவிலுக்குச் சென்று, காணிக்கை செலுத்தி, […]
