கோவை மாவட்டம், அரிசிபாளையம் அருகே உள்ள ரோஸ்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (வயது 56). இவர் வலுக்குப்பாறை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல தன் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் பத்மா கிடைக்கவில்லை. இதுகுறித்து மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே நாச்சிபாளையம் அருகே நேற்று (மார்ட் 19) பத்மாவில் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் முழுவதும் எரிந்த நிலையில் பத்மாவின் உடல் கண்டறியப்பட்டது.
காவல்துறையினர் பத்மாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பத்மாவின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தொடக்கத்தில் இது கொலையாக இருக்குமோ என்று தகவல் வெளியானது. இந்நிலையில் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பத்மா கடந்த சில ஆண்டுகளாகவே மன அழுத்தத்திலிருந்துள்ளார். சம்பவத்தன்று அவர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் வாங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவர் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே முழு தகவல் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks