ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் 1 ஏப்ரல் 2025 முதல் அனைத்து மாடல்களும் 3% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. தற்பொழுது வேரியண்ட் வாரியாக விலை உயர்வு பற்றி வெளியிடப்படவில்லை.
அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் செலவுகள், பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகரித்த செயல்பாட்டு செலவுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் விலை உயர்வினை தவிரக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.
முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க் கூறுகையில், அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டாலும், செலவுகளை ஈடுகட்ட விலை உயர்த்த வேண்டியிருக்கின்றது. அதிகரிப்பு ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும், மேலும் எதிர்கால செலவு அழுத்தங்களைக் குறைப்பதற்கான உள் நடவடிக்கைகளில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.