பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் விலையும் ஏப்ரல் 1, 2025 முதல் உயர்த்தப்பட உள்ளது. ஆனால் எத்தனை சதவீதம் உயர்த்தப்படும் என குறிப்பிடவில்லை.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ” உற்பத்தி மூலப்பொருட்களின் செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்ய இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுகிறது. மேஸ், சிட்டி, சிட்டி இ:ஹெச்இவி மற்றும் எலிவேட் போன்ற மாடல் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என இந்நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் வேரியண்ட் வாரியான விலையை தற்பொழுது அறிவிக்கவில்லை.