மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் , 2025 ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் போட்டியின்போது பந்தை பளபளப்பாக்க செய்ய எச்சிலை தொட்டு தேய்க்கும் நடைமுறைக்கு விதிக்கப்பட்ட தடையை பிசிசிஐ நீக்கியது. கொரோனா பெருந்தொற்றின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக ஐசிசி தடைவிதித்திருந்தது.
மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கேப்டன்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்தத் தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது.இந்த நடைமுறை நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே அமலுக்கு வருகிறது என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.