தோல்வியே இல்லாமல் வெற்றி: நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இந்திய அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் இந்திய அணி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. முதலில் லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தியது.
2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய அணி. பின்னர் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று, அடுத்த சில மாதங்களிலேயே மினி உலகக் கோப்பையை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. தொடர்ந்து இரண்டு ஐசிசி கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி.
உலக அளவில் இரண்டாவது இடம்
ஐசிசி கோப்பையை வென்றதில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சமநிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்து கோப்பைகளை வென்று அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது இந்திய அணி.
மேலும் படிங்க: CSK vs MI IPL Opening Ceremony : சேப்பாக்கத்தில் ஐபிஎல் தொடக்க விழா… பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்
இதுவரை 7 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. இதன் மூலம் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்ரேலியா அணி உள்ளது. அந்த அணி 10 ஐசிசி கோப்பைகளை வென்றிருக்கிறது. அடுத்ததாக இந்திய அணியும், 5 கோப்பைகளை கைபற்றி 3வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உள்ளது.
ரூ.58 கோடி பரிசு
இந்த நிலையில், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதற்கு பிசிசிஐ ரூ.58 கோடி பரிசாக அறிவித்துள்ளது. கடந்த முறை, 2024 டி20 உலகக் கோப்பை வென்றதற்கு ரூ.125 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இம்முறை நடந்தது உலகக் கோப்பை இல்லை, சாம்பியன்ஸ் டிராபி என்பதால் குறைவான பரிசு தொகையே அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2025ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ஐசிசி கோப்பை” என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இந்திய U-19 மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றிருந்தது. அதைத் தொடர்ந்து இந்திய ஆடவர் அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.
மேலும் படிங்க: MI First Match Jinx: ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணியின் மோசமான ரெக்கார்டு!