இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களுல் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். இவர் பிரபல நடன கலைஞரான தனஸ்ரீ வர்மாவை கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் கரம் பிடித்தார். இதையடுத்து இருவரும் சேர்ந்து நன்றாக வாழ்ந்து வந்தனர். அவ்வபோது சமூக வலைத்தளங்களில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.
மனு தாக்கல்
ஆனால் கடந்த ஆண்டில் இவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர்களே தங்களது சமூக வலைத்தளம் மூலம் இருவரும் பரஸ்பரம் பிரிந்துள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர்.
அவர்கள் விண்ணப்பித்த மனுவில், இருவரும் கடந்த இரண்டு வருடங்களாகவே பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், அதனால் ஆறு மாத காட்டாய காத்திருப்பை நீக்கி உடனடியாக விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து இந்த மனுவை கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், 6 மாத காத்திருப்பை நீக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை நிராகரித்தது.
மேலும் படிங்க: இந்த ஐபிஎல் தொடரில் ரொம்ப டேஞ்சரான டீம் எது தெரியுமா? மும்பை, பஞ்சாப் இல்லை
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இதனைத் தொடர்ந்து யுஸ்வேந்திர சாஹல் தரப்பில் இருந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 19) விசாரித்த நீதிபதி, ஐபிஎல்லில் சாஹல் பங்கேற்பதால், மனுவை நாளைக்குள் (மார்ச் 20) முடிவு செய்யுமாறு குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவைஒ பிறப்பித்தார். இந்த நிலையில், இன்று (மார்ச் 20) யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மாவுக்கு விவாகரத்து வழங்கி மும்பை பாந்திரா குடும்ப நல நீதிமன்றம் அதிரடி த்தரவை பிறப்பித்துள்ளது.
ஜீவனாம்சம்
ஜீவனாம்சமாக சாஹல் – தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் சாஹல்- தனஸ்ரீ வர்மாவுக்கு முழுமையான ஜீவனாம்சத்தை கொடுக்கவில்லை என்றும் அவர் ரூ. 2.37 கோடி மட்டுமே கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று விவாகரத்து தீர்பு வெளியான நிலையில், சாஹல் மீதமுள்ள தொகையை கொடுப்பார் என தகவல் வெளியாகி வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் யுஸ்வேந்திர சாஹல் விளையாட உள்ளார். அவர் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய அவர், டிசம்பர் மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: IPL போட்டிகளை மொபைலில் இலவசமாக எப்படி பார்ப்பது? Jio, Airtel, Vi பயனர்களுக்கு குட் நியூஸ்